நிந்தவூர் மக்களுக்கு புதிய மாவட்ட வைத்திய அதிகாரி
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் புதிய மாவட்ட அதிகாரியான டாக்டர் ஆகில் சரிபுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் தொடர்புகொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு தனது கருத்தை தெரிவித்தார்.
”இவ்வைத்தியச்சலையில் இருந்து சே சேவையைப்பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு நான் கூற வருவது யாதெனில் இது உங்கள் வைத்தியசாலை ,இந்த வைத்தியசாலையிலிருந்து நீங்கள் உச்ச பயனைப்பெற்றுக்கொள்ளுங்கள். அதனை நேசியுங்கள். உதவுங்கள். தமது சொந்த நலன்களுக்காக சீரான பணிகளுக்கு இடையுறு ஏற்படுத்தாதீகள். உங்களுக்கு வைத்தியசாலையில் ஏதும் அசெளகரியங்கள் ஏற்படுமிடத்து ரகளை செய்வதனை விடுத்து அவற்றை உரிய முறையில் தலைமைத்துவத்துக்குத் தெரியப்படுத்துங்கள். நான் எப்போதும் உங்களுக்குச் சேவை செய்யவும், செவிசாய்க்கவும் தயாராக உள்ளேன்.”
நிந்தவூர் மக்கள் அனைவரும் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நமது வைத்தியசாலையின் தரத்தையும் சேவையையும் இன்னும் உயர்த்துவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து முயற்சிப்போம்.

Post a Comment