Header Ads



புத்தளம் மாவட்டத்தில் உள்ளுர் விமான நிலையம் ஒன்று ஸ்தாபிக்க தீர்மானம்

கல்பிட்டி சுற்றுலா வலயத்திற்கு, சுற்றுலா பயணிகள் துரிதமாக செல்லும் வகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ளுர் விமான நிலையம் ஒன்று ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பாலாவியில் இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்படும் என விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆரம்ப கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மாத இறுதியில் இதற்குரிய நிர்மாண பணிகள்  ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் நிர்மாண பணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.