Header Ads



கல்முனை இஸ்லாமாபாத் யங் மௌண்ட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை இஸ்லாமாபாத் யங் மௌண்ட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 16-02-2013  நடைபெற்றது.

இஸ்லாமாபாத் யங் மௌண்ட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்முனை டொபாஸஸ் அணியும் யங் மௌண்ட் அணியும் மோதின.இதில் கல்முனைடொபாஸஸ் அணி வெற்றிபெற்றது.அணிக்கு 8 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் கல்முனைப்பிரதேசத்திலுள்ள 16 கழகங்கள் பங்குபற்றின.

யங் மௌண்ட் விளையாட்டுக்கழகத்தின்தலைவர் ஏ.ஏ.றஹ்மான் தலைமையில்நடைபெற்ற இன்றைய தின இறுதி நிகழ்வில் கல்முனைப்பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் மற்றும் கல்முனைபொலிஸ்நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் மற்றும் அமானா பூட்சிட்டி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.முஸ்தாக உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.