Header Ads



அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா பயணிகள் போக்குவரத்து பேருந்துசாலைக்கு விஜயம்

வவுனியா பயணிகள் போக்குவரத்து பேருந்து சாலைக்கு கைத்தொழில் , வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று 14-02-2014 விஜயமொன்றினை மேற்கொண்டார்.இப்பிரதேச மக்களுக்கு சாலை மூலம் வழங்கும் சேவைகள் தொடர்பில் அதிகாரிளுடனும்,ஊழியர்களுடனும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

தனிப்பட்ட சில செயற்பாடுகள் ஒரு போதும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு வழி கோலாது.கூட்டுப் பொறுப்பும்,எமது தியாகமுமே நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு காரணமாகும்.தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் வெளியில் இருந்து வருகின்ற சவால்களை முறியடிக்க முடியும் என்றும் இங்கு அமைச்சர் கூறினார்.

வவுனியா போக்குவரத்து பேரூந்து சாலை தேவைகள் தொடர்பில் அமைச்சரிடத்தில் கோறிக்கை அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன்,முன்னால் வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி,சாலை பிராந்திய முகாமையாளர் அஸ்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.