அமெரிக்க பேராசிரியருடன் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பற்றி பேச்சு
(எம்.ஏ.றமீஸ்)
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மானிடவியற் துறைப் பேராசிரியர் டென்னிஸ் கல்முனையில் அமைந்துள்ள ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பவுண்டேசன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பவுண்டேசன் தலைவர் மௌலவி முஹியத்தீன் மன்பயி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் பூர்வீக வரலாற்று விடயங்கள் பற்றியும், முஸ்லிம்கள் நாளாந்தம் இயல்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது.
இது தவிர ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பவுண்டேசனின் கடந்த காலச் செயற்பாடுகளுடனான முன்னேற்றங்கள் பற்றியும், இவ்வமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வின் போது அமைப்பின் பிரதித் தலைவர் மௌலவி அல்-ஹாபிழ் எம்.ஐ.எம்.றியாஸ் உள்ளிட்ட நிருவாக சபையில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment