Header Ads



கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி, பெயர் மாற்றம் செய்வததை எதிர்த்து கண்டன பேரணி


கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி  பெயர் மாற்றம் செய்வததை எதிர்த்து நாளை திங்கட் கிழமை கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டன பேரணி நடத்தவுள்ளது. இது தொடர்பான கூட்டம் இன்று 09 பகல் கல்முனை முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பல்தெவை கட்டிட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும்  தமிழ் மக்கள் சிலரும் கலந்து கொண்டனர் .

நாளை 10 .02.2014  காலை  கல்முனை ஆனைபிள்ளையார்  ஆலயத்தில்  ஓன்று கூடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  தற்போது எழுதி வைக்கப்பட்டுள்ள சுலோக அட்டைகளுடன்  தரவைப்பிள்ளை யார் ஆலயத்துக்கு சென்று அங்கிருந்து ஊர்வலமாக  கல்முனை மாநகர சபைக்கு சென்று அங்கு மாநகர முதல்வரிடமும்,ஆணையாளரிடமும் மகஜர் கையளித்து பின்னர் கமுனை பிரதேச செயலாளர்களிடமும் மகஜர் கையளிக்கப் படவுள்ளதாக  போலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் 

ஏற்கனவே இந்த வீதிக்கு பெயர் சூட்டுவதி பல எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும்  நாளை இந்த எதிர்ப்பு ஊர்வலம் நடைபெறவுள்ளது 

No comments

Powered by Blogger.