கத்தாரில் இலங்கை வாலிபர் வபாத்
(M.A.G.M MUHASSIN (Qatar)
அட்டாளைச்சேனை, ஆலங்குளத்தை பிறப்பிடமாகவும் , இறக்காமத்தை
வாழ்விடமாகவும் கொண்ட அப்துல் மஜீத் நஜிமுதீன்
(வயது 35) இன்று 09-02-2014 கட்டாரில் வபாத்தானார்
“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” தொழில் நிமித்தம் காகித
ஆலையொன்றில் பணி புரிய கட்டார் நாட்டிற்கு வந்து எட்டு மாதங்கள் ஆகின்ற வேளை நேற்று இரவு சினையா 6 இல் உள்ள தனது படுக்கை அறையில் உறங்கியவர் காலையில் எழுந்திருக்கவில்லை சந்தேகம் கொண்ட சக தோழர்கள் எழுப்பியபோது அவரது உயிர் உடலை விட்டு பிரிந்திருந்தது.
தற்போது ஜனாஸா கட்டார் ஹமத் மருத்துவ மனையில் பிரிவு எண் 312 இல்
பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.

Post a Comment