இக்ரஃ இஸ்லாமிய சங்க முன்னால் தலைவர் முனாஸ் நளீமிக்கான சேவை நலன் பாராட்டு
சுமார் 22 வருடங்களாக இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் தலைவராகவும் இலங்கை முஸ்லிம் சமூகப்பிரிவுக்கான அவ்காப் அமைச்சின் இணைப்பாளராகவும் பணியாற்றிவிட்டு தாய்நாட்டுக்கு பயணிக்கவிருக்கும் முனாஸ் நளீமி அவர்களை பாராட்டி கௌரவிக்குமுகமாக இக்ரஃ இஸ்லாமிய சங்கமும் குவைத்தில் இயங்குகின்ற ஏனைய சமூக சேவை அமைப்புகளும் இணைந்து ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது.
விழா குவைத் பெரிய பள்ளிவாசல் ரோயல் அரங்கத்தில் சங்கத்தின் தலைவர் அஷ். மன்சூர் நளீமி தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. '1992 ஆம் ஆண்டு முதல் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் மூலமாக இலங்கைஇ இந்தியாவை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளை நினைவூட்டினார். விழாவில் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பிரதம அதிதியாக குவைத் இலங்கை தூதரகத்தின் உயரதிகாரி அனஸ் அவர்கள் கலந்துகொண்டார்கள். அவர் தனதுரையில் 'அஷ் முனாஸ் அவர்களின் பணியை நினைவு கூர்ந்ததோடு அவர் ஒரு முன்மாதிரி ஆளுமைஇ பின்பற்றத்தக்க பல பண்புகள் அவரிடம் உள்ளனஇ அவரது ஆளுமை தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக' தெரிவித்தார்.
தொடர்ந்து அஷ்.முனாஸ் உரையாற்றினார். அவர் தனதுரையில் 'தான் எதனையும் தனியாக சாதிக்கவில்லையென்றும் தன்னோடு பலரும் ஒத்துழைத்ததாகவும் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகூறுவதாகவும், உழைப்பதோடு மாத்திரம் குவைத் வாழ்வை சுருக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் குவைத்திலிருக்கின்ற சந்தர்ப்பங்களை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தோடு இணைந்து பணியாற்றுமாறும் தனக்காக துஆ செய்யுமாறும்' வேண்டிக்கொண்டார்.
இறுதியாக அனுசரனை வழங்கிய அனைத்து சமூகசேவை அமைப்புகளும்; அஷ். முனாஸ் அவர்களுக்கு நினைவுச்சின்னங்களை வழங்கினார்கள். இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் சார்பாக நினைவுச்சின்னத்தை பிரதம அதிதியும் அனஸ் அவர்களும் இஸ்லாமிய நிதித்துறை நிபுணர் இக்ராம் தௌபீக் அவர்களும் இணைந்து வழங்கினார்கள். இந்நிகழ்வில் அவ்காப் அமைச்சின் ஜாலியாத் பிரிவின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக விழாவை நெறிப்படுத்திய றமீஸ் நளீமி அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது.

ANKUERUNDALUM ERAI ARULMANMAYUDAN WALA AL JAHARAMAKKALIN NALLASIKAL ASSEK MUNAS NALEEMIKKU MEENRUM APPODAWADU KUWAIT WANDAL TAWARAAMAL JAHARAWARAWEENDUM ANGALAI SANDIKKAWEENDUM //////HARISNANAVINANPUWENDUKOL,
ReplyDelete