அக்கரைப்பற்றில் தோனியும், கரைவலையும் இனந்தெரியாதோரால் தீக்கிரை (படங்கள் இணைப்பு)
(ஏ.எல்.ஜனூவர்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அட்டாளைச்சேனை - 8 றகுமான் துனை கரைவலை மீனவர் அமைப்புக்கு சொந்தமான செய்லாப்தீன் என்பவரின் தோனியும், கரைவலையும் இனந்தெரியாதோரால் இன்று 09-02-2014 நன்பகல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸில் குறித்த நபரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் பல இலட்சம் பெறுமதியான தோனியும், வலையும் இதனால் சேதமாக்கப்பட்டுள்ளது.



Post a Comment