Header Ads



அமெரிக்க கடல் எல்லைப்பகுதி அருகாமையில், ஈரானின் போர்க் கப்பல்கள்

அமெரிக்க கடல் எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள அட்லாண்டிக் கடற்பகுதிக்கு ஈரான் தனது போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக ஈரானின் வடக்கு பிராந்திய கடற்படை கமாண்டர் அஃப்சின் ரிஜாயி ஹதாத்தை மேற்கோள்காட்டி, ஐஆர்என்ஏ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

அட்லாண்டிக் கடற்பகுதிக்கு ஈரான் நாடு தனது போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்கா அருகே உள்ள கடல்பகுதி வழியாக அந்தக் கப்பல்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க கடல் எல்லைப்பகுதி அருகாமையில், ஈரானின் போர்க் கப்பல்கள் செல்வது இதுவே முதல்முறையாகும்.ஈரான் கடற்பகுதி அருகே அமெரிக்க போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கு பதிலாக தனது போர்க் கப்பல்களை ஈரான் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.