9 A பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு - கொழும்பு விகார மஹாதேவி வெளியரங்கில் நடைபெற்றது.
முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ஏ தரத்திலான அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 09-02-2014 கொழும்பு விகார மஹாதேவி பூங்கா திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஷாக், விசேட அதிதி சிங்கப்பூர் சமூக கலை இலக்கிய நற்சேவையாளரும் புதிய நிலா இதழாசிரியருமான மு.ஜஹாங்கீர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் சங்க தலைவர் அஹம்மட் முனவ்வர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் சகல பாடங்களிலும் அதிசிறந்த விசேட தரங்களைப் பெற்ற சுமார் 200 மாணவ, மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் பணம் உட்பட சுமார் பத்தாயிரம் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டது.






.jpg)
Post a Comment