முஸ்லிம் நாடுகளுக்கும், மொஸாதிற்கும் நெருங்கிய உறவு!
முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொஸாதிற்கும் நெருக்கமான உறவு நிலவுவதாக இஸ்ரேலிய இணையதளம் ஒன்றில் வெளியான அறிக்கை கூறுகிறது.
ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான், சவூதி அரேபியா, யு.ஏ.இ, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுடன் பாதுகாப்பு,ராணுவ, உளவு தகவல்களை பரிமாறுவதற்காக மொஸாத் திடமான உறவனி பேணி வருகிறது.
பஹ்ரைன், ஈரான், ஃபலஸ்தீன் நாடுகளின் நகர்வுகளை அறிய முஸ்லிம் நாடுகளுடன் உறவை மொஸாத் பேணி வருகிறது.சவூதி உளவுத்துறைக்கும், மொஸாதுக்கும் இடையேயான உறவு வளர்ந்து வருகிறது.இரு உளவுத்துறைகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த மொஸாதின் முன்னாள் தலைவர் மியர் தாகன் சவூதி அரேபியாவிற்கு விசிட் அடித்துள்ளதாகவும் இஸ்ரேலிய இணையதள செய்தி கூறுகிறது.
செங்கடலில் ஆய்வு நடத்த இஸ்ரேலுக்கு, சவூதி அரேபியா அனுமதி அளித்துள்ள தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளது.1982-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சவூதி, இஸ்ரேல் உளவுத்துறைகளுக்கு இடையேயான உறவு சாத்தியமானது.
யு.ஏ.இ உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு இஸ்ரேல் உபகரணங்களை விற்பனைச் செய்கிறது.மொரோக்காவின் எதிர் கட்சி தலைவருடை படுகொலையில் மொஸாதிற்கு பங்குள்ளது.முன்னாள் மொராக்கோ மன்னர் ஹஸன் யூதர்களுக்கு அளித்த உதவிக்கு நன்றிக்கடனாக மொஸாத் எதிர்கட்சி தலைவரை கொலைச் செய்துள்ளது.
அல்ஜீரியா உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகளுக்கு ரேடார், வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை இஸ்ரேல் வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேலிய இணையதள செய்தி கூறுகிறது. thoo
.jpg)
Post a Comment