அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிப்பு
(எஸ்.ரீ. ஜமால்டீன், ஏ.பீ. அப்துல் றஹுமான்)
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் 2013 ஆம் ஆண்டின் அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப்போட்டியில் பங்குபற்றி, முஸ்லிம் நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினையும் விவாதப் போட்டியில் இரண்டாம் இடத்தினையும், நாட்டார் பாடல் போட்டி நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தையும் பெற்ற 17 மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று(19-02-2014) கல்லூரியின் அதாஉல்லாஹ் கேட்போர் கூடத்தில் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் ஏ.எஸ். அஹமட் கியாஸ், மற்றும் விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ்ப்பாடப் பிரிவின் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.ஐ.எம். ஹனீஃபா, மொபிலீ(சவுதி அரேபியா) தொலைத்தொடர்பு வலையமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர்(Intelligent) ஜனாப் அப்துஸ் ஸமது முஹம்மது யாசின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின் இணைப்புச்செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர், அக்கரைப்பற்று வலய அதிபர்கள், ஆசிரியர்கள், வெற்றியீட்டிய மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மாணவர்கள் என கலந்து சிறப்பித்தனர்.
வெற்றியீட்டிய மாணவர் விபரங்கள்.
முஸ்லிம் நிகழ்ச்சி – முதலாம் இடம் (தேசிய மட்டம்)
1. எம்.எம். ஹிஜாஸ் அஹமெட்
2. ஏ. ஆர். லஃப்றி அஹமெட்
3. ஐ. பயாஸ் அஹமெட்
4. எம். மொஹமட் சஃப்னாஸ்
5. என். நுஸ்கி
6. என். நஹ்பீஸ்
7. எஸ்.ரீ. மும்தாஸ்
8. ஏ.ஆர். ஸஹீர் மொஹமெட்
விவாதம் – இரண்டாம் இடம் (தேசிய மட்டம்)
1. ஏ.ஆர். மொஹமெட் நாஸிக்
2. ஏ.ஆர். பிஸ்றி அஹமெட்
3. எம்.பீ. அசாம் மொஹமெட்
நாட்டார் பாடல் - மூன்றாம் இடம் (தேசிய மட்டம்)
1. எம்.எச். குல்ஷான் அஃப்றா
2. எம்.சீ. சித்தி பாஹிமா
3. எம். பாதிமா நாளிறா
4. ஏ.எல். அர்ஷித்
5. ஆர். அஹமெட் அர்ஹம்
6. ரீ.எஸ். மொஹமெட் அக்காஸ்



Post a Comment