இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான அமைப்பாளராக நியமனம்
(யு.எம்.இஸ்ஹாக்)
அம்பாறை மாவட்ட நிந்தவூரை சேர்ந்த தேசமான்ய முஹம்மட் தம்பி நூருல் ஹுதா அகில இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.
இவர் அண்மையில் இவ்வமைப்பினால் விவகீர்த்தி பட்டமும் வழங்கி கௌரவிக்கப் பட்டார் . நிந்தவூரை சேர்ந்த மர்ஹூம்களான தமீம் மௌலவி ,ஹாஜியானி சித்தி சஹ்றா தம்பதிகளின் புதல்வரான இவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தொலை தொடர்பு பிரிவிலும்,சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment