Header Ads



நவநீதம்பிள்ளையின் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்தது


இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச  விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரையை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அவரது அறிக்கை, பக்கசார்பானதாகவும், இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசாங்கத்தின் உள்விவகாரங்களில் தேவையின்றித் தலையீடு செய்வதாகவும் அமைந்துள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.