மள்வான முச்சந்தி கடைத் தொகுதியில் தீ விபத்து
மல்வான, முச்சந்தி பகுதியிலுள்ள கடைத் தொகுதியில் இன்று 07-02-2014 அதிகாலை தீ பரவியுள்ளது. அதிகாலை 4.30 அளவில் தீ பரவியிருந்ததுடன், தீயணைப்பு சேவைப் பகுதியினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, களனி கொஹொல்வில வீதியிலுள்ள பிளாஸ்ரிக் உற்பத்தி நிலையமொன்றிலும் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தீ அனர்த்தம் அதிகாலை 4.30 அளவில் ஏற்பட்டுள்ளதுடன், பிளாஸ்ரிக் உற்பத்தி நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
.jpg)
Post a Comment