Header Ads



பாடசாலை மாணவர்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டம்

(Nf) பாடசாலை மாணவர்கள் பல்வேறு விபத்துகளுக்கு ஆளாவதை தடுப்பதற்கான புதிய பாதுகாப்பு திட்டமொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏனைய நாடுகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கும் வழிமுறைகளையும் இந்த திட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு எண்ணியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான ஆலோசனைகளை தனக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நாட்டில் காணப்படுகின்ற நடைமுறை ரீதியிலான குறைப்பாடுகளை புதிய திட்டத்தின் ஊடாக நிவர்த்தி செய்துகொள்ள முடியும் எனவும், அனுர திசாநாயக்க குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம் பாடசாலை நேரம் நிறைவடைந்த பின்னர் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்துவதற்கும், அதிபர்களை தெளிவுபடுத்துவதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.