இலங்கையில் விழுந்த விண்கல் இந்தியாவுக்கு செல்கிறது
ராகலை - வலப்பனை ராகலை பகுதியில் வீடொன்றின்; மீது நேற்று விண்கல்லின் ஒருபகுதியே வீழ்ந்துள்ளதாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் புவியியல் தொடர்பான பேராசிரியர் அத்துல சேனாரட்ன தெரிவித்துள்ளார்..
சம்பவத்தை அறிந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் பிரதானி ஜகத் குணசேகர உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று பரிசோதனைகளை ஆரம்பித்திருந்தனர்.
அவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த திண்மப்பொருள் விண்கல் என பேராசிரியர் அத்துல சேனாரட்ன குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவான ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விண்ணில் இருந்து வீழ்ந்த பொருளை இந்தியாவிற்கு அனுப்பி அதன் துல்லியமான தன்மைகளை ஆராயவுள்ளதாக மத்திய நிலையத்தின் பேராசிரியர் சுராஜ் குணசேகர தெரிவித்தார்.
.jpg)
Post a Comment