Header Ads



ஆப்கனில் தோல்வி - ரஷ்யாவை பின்பற்றும் அமெரிக்கா

(சுவனப் பிரியன்) 

சோவியத் யூனியன் அப்கானிஸ்தானத்தை விட்டு தனது படைகளை விலக்கிக் கொண்டு சென்றதில் கடந்த சனிக் கிழமையோடு 25 வருடம் பூர்த்தியாகிறது. இந்த நாளை அரசு விடுமுறையாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது. 

காரி அஹமத் யூசுப் என்ற தாலிபான் ஆதரவாளருக்கு தாலிபான்களிடமிருந்து ஒரு ஈமெயில் வந்துள்ளது. அதில் உள்ள செய்தியாவது: 'கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் சோவியத் யூனியனுக்கு என்ன கதி எங்கள் நாட்டில் ஏற்பட்டதோ அதே நிலையை அமெரிக்கா இன்று சந்தித்து வருகிறது. எங்களது நாட்டிலிருந்து எப்படியாவது வெளியேறி விட காரணத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. சோவியத் யூனியனுக்கு கொடுத்த அதே தோல்வியை அமெரிக்காவுக்கும் எங்கள் மக்கள் கொடுப்பர். இஸ்லாமிய குடியரசான ஆப்கானிஸ்தானில் காலடி வைத்த எந்த ஆக்கிரமிப்பாளர்களையும் நிம்மதியாக இங்கு வாழ விட மாட்டோம். சோவியத் ஆக்கிரமிப்பாளர்கள் கடைசியாக எங்கள் மண்ணை விட்டு சென்ற நாள் பிப்ரவரி 15 1989. எங்கள் மண்ணில் எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரு சிறு இடத்தைக் கூட விட்டுத்தர நாங்கள் சம்மதிக்க மாட்டோம். சோவியத் யூனியனைப் போலவே அமெரிக்காவும் அவமானப்பட்டு எங்கள் மண்ணை விட்டு செல்லும் நாள் தொலைவில் இல்லை. எனது நாட்டு மக்களை மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கிய அமெரிக்கர்களையும், நேட்டோ படையினரையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டோம். இறைவனின் துணை கொண்டு இந்த சுதந்திர போரில் நாங்களே வெற்றி பெறுவோம். அமெரிக்கர்கள் தங்கள் நாட்களை எண்ணிக் கொள்ளட்டும்.' என்று அந்த ஈமெயில் செய்தி சொல்கிறது.

அமெரிக்காவுக்கு தர்ம சங்கடமான நிலை. புலி வாலை பிடித்த கதையாகப் போய் விட்டது. அமெரிக்க ராணுவத்துக்கு அனுசரணையாக இருந்த பல ஆப்கன் குழுக்கள் இன்று தாலிபான்களுக்கு ஆதரவாக மாறி தாக்குதல் தொடுக்கின்றனர். தோல்வியை ஒத்துக் கொண்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் வெளியேறா விட்டால் இந்த சண்டை இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் முடிவுக்கு வராது என்பதும் அவர்களுக்கு தெரியும். இத்தனை உயிர்களை பலி கொடுத்து அதற்கு பகரமாக பெரும் தொகையை சுருட்டவும் முடியாது. ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் அமெரிக்கர்கள் கொள்ளையிடும் அளவுக்கு வளமானதாகவும் இல்லை. இங்குள்ள கால நிலை அமெரிக்கர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. பல அமெரிக்க ராணுவ வீரர்கள் இன்று மன நிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே அமெரிக்கா பல பில்லியன்களை இந்த சண்டைக்காக செலவழித்துள்ளது. அமெரிக்க மக்களிடத்திலும் இந்த சண்டைக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பாகிஸ்தான் அரசும், ஆப்கானிஸ்தான் அரசும் தாலிபான்களோடு மறைமுக பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் சுமூக முடிவு எட்டப்படலாம். 

தோல்வியை ஒத்துக் கொண்டு ரஷ்யாவைப் போல் அவமானத்தோடு அமெரிக்கா ஆப்கனை விட்டு வெளியேறும் காட்சியை இனி பார்க்கலாம். நம்ம பார்பன அம்பி கமலஹாஸன் இனி 'விஸ்வரூபம் 2' ன் கிளைமாக்ஸை தாலிபான்களுக்கு சார்பாக மாற்றி எடுக்க வேண்டி இருக்கும். ஆஸ்கார் விருது வாங்கும் எண்ணமும் இனி அவ்வளவுதானா! :-)

தகவல் உதவி
 அல்அரபியா
 15-02-2014 

No comments

Powered by Blogger.