''ஜெனீவா காய்ச்சல்'' தென்கொரியாவில் பசில் ராஜபக்ஸவும், அமெரிக்காவும் ஏட்டிக்கு போட்டியாக பேச்சு
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில், தென்கொரியாவின் ஆதரவு கோரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்பு தூதராக, அமைச்சர் பசில் ராஜபக்ச சியோலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சியோல் சென்றுள்ள அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று, அந்தநாட்டின் பிரதமர் சுங் ஹொங்- வொன்னுடன் (Chung Hong-won) பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, தென்கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹாப் (Yonhap) செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது, தென்கொரியாவின் அபிவிருத்தி அனுபவங்களை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளுமாறும், பொருளாதார விருத்திக்கு பங்களிப்புச் செய்யுமாறும் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான ஆதரவைக் கோரியே பசில் ராஜபக்ச தென்கொரியா சென்றுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் தகைமையைக் கொண்டுள்ள தென்கொரியா, கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
இதற்கிடையே, சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரவுள்ள அமெரிக்காவின், இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் தற்போது தென்கொரியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் நேற்று, தென்கொரிய அதிபர் பாக் கியூன் ஹையை (Park Geun-hye) சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment