காத்தான்குடியில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முஅய்யித் பாடநெறி
(டீன் பைரூஸ்)
அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு இஸ்லாம் வாழ்வதற்காக வாழும் தனிமனிதர்களை உருவாக்குதல் என்ற இலக்குடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் ஏற்பாட்டினில் முஅய்யித் பாடநெறி 2014 அஷ்ஷெய்ஹ் ZN றிஸ்வானுல் றஹீம்(நழீமி) BA அவர்களின் விரிவுரையில் நடைபெற்றது. புதிய காத்தான்குடி இமாம் அபு ஹனீபா வீதியில் (மட் சுஹதா வித்தியாலயம் முன்பாக) அமையப் பெற்றுள்ள மஸ்ஜித் அல் பிர்தௌஸ் இல் மேற்படி பாடநெறி பிரதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடை பெற்றது.
மூன்று வாரங்கள் தொடராக நடை பெற்ற முஅய்யித் பாடநெறியில் வைத்தியர்கள்,பொறியியலாளர்கள். ஆசிரியர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள்,உலமாக்கள்,ஹாபிழ்கள், வர்த்தகர்கள் ,பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள்,மாணவர்கள் ,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தீனை உரிய முறையில் கற்று அதன்படி வாழ்ந்து எமது உன்னதமான இலக்ககை அடைந்து கொள்ள ஓர் அரிய சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மேற்படி பாடநெறி பத்து தலைப்புக்களுடன் நடை பெற்றது.
மனித வாழ்வு.
இஸ்லாம் ஓர் அறிமுகம்.
இஸ்லாத்தின் அத்திவாரம் “ லாயிலாஹ இல்லல்லாஹ் ”.
முஸ்லிமின் முன்மாதிரி “ முஹம்மதுர்றசூழூல்லாஹ் “
இறை வழிகாட்டலின் தேவை (சூறா பாத்திஹா) விளக்கம்.
முஸ்லிம் என்பவன் யார்…?
அல்லாஹ்வின் துாதர் செய்த பணி எத்தகையது….?
இன்று இப்பணியை எவ்வாறு செய்யலாம்…?
முஸ்லம் சமூகத்தின் இன்றைய நிலையும் கூட்டமைப்பின் அவசியமும்.
“ குல் ஹாதிஹீ சபீலீ ” இதுவே எனது பாதை.பணி,வேளை…………?
மெற்படி தலைப்புகள் தொடர்பான விசெட விளக்கம் இறை பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வரும் அஷ்ஷெய்ஹ் ZN றிஸ்வானுல் றஹீம்(நழீமி) BAஅவா்களினால் நடாத்தப்பட்டது விசேட அம்சமாகும்.
ஜமாஅத் உருவாக்க நினைக்கும் தனிமனிதப் பண்புகள்.
அகீதாவில் ஆரோக்கியமானவர்.
இபாதத்தில் சரியானவர்.
பண்பாட்டில் உறுதியானவர்.
சிந்தனை தெளிவுள்ளவா்.
உடல் பலமுள்ளவர்.
தனது உள்ளத்தோடு போரடுபவர்.
தனது நேரத்தில் கரிசனை உள்ளவர்.
உழைக்கும் ஆற்றல் உள்ளவர்.
தனது காரியங்களை ஒழுங்கு படுத்துபவர்.
பிறருக்கு பிரயோசனமானவர்.
இவை போன்ற பல சிந்தனைகளை சமூகதிடம் கொண்டு செல்கின்ற பணிகளை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்னின்று செயல்பட்டு வருகின்றது எனவெ எதிர்காலத்தில் நீங்களும் உங்களால் முடியுமான பங்களிப்பினை செய்வதோடு இவ்வாறான பாடநெறிகளில் கலந்து கொண்டு பயன் பெறவும்.
.jpg)
Post a Comment