கல்முனை நிர்ப்பாசன பொறியியலாளர்அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நிகழ்வுகள்
(ஏ.பி.எம்.அஸ்ஹர் + யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை நிர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. மாவடிப்பள்ளி பிரதான விதிக்கருகில் புதிதாக நிர்மாணிக்கப்படுள்ள நிர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்வும் கரைவாகு வட்டை வடிச்சல்திட்டத்திற்கான கொபெல்கோ இயந்தரத்தை மிண்டும் நிர்ப்பாசன திணைக்களத்திடம் ஒப்படைத்து அதன் வேலைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுமே இன்று இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கல்முனை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல பாராளுமன்ற உருப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் கலந்து கொண்டார்.இவரின் முயற்சியின் பயனாகவே நிண்டகாலக்குறைபாடாக இருந்த இந்த கொபெல்கோ இயந்தரத்ம் மிண்டும் கல்முனைப்பிரதேசத்திற்குக்கொண்டுவரப்பட்டுள்துடன் 2010ஆம் ஆண்டுடன்
கைவிடப்பட்டிருந்த கரைவாகு வடிச்சல்திட்டம்மிண்டும் ஆரம்பிக்கப்படவுளள்து.
பொறியியலாளர்கள் இந்நிகழ்வுகளில் நிர்ப்பாசன அமைச்சின் மேலதிக பனிப்பாளர் நாயகம் எம்.வை.ஏ.மஜித். நிர்ப்பாசன அமைச்சின் அம்பாரை மாவட்ட உயரதிகாரிகளான பொறியியலாளர்கள் நிஹால்சிரிவர்தன சமன்விரசிங்க எம்.இப்ராஹிம் திலகரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment