Header Ads



நான் புலி எலும்பில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை சாப்பிட்டேன் - ஜாக்கிசான்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'சதைகளை இளக்கமாக வைத்துக் கொள்வதற்காக, நான் புலி எலும்பில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை சாப்பிட்டேன். ஆனால், அது ஒன்றும் பயன்தரவில்லை,' என்று கூறினார். 

மேலும், 'குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள நான் பயற்சி மேற்கொண்ட போது விலங்குகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டேன். ஆனால், அவை எந்த பலனும் தரவில்லை. விலங்குகள் மூலமான மருந்துகள் உடல் நலத்தை கொடுக்கும், நோயை தடுக்கும் என்ற நம்பிக்கை ஆசிய நாடுகளில் பரவலாக உள்ளது. ஆனால், அது சரியல்ல. ஆசியர்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் இந்த நடைமுறையை கைவிட வேண்டியது அவசியம்,' என்றார். 

No comments

Powered by Blogger.