Header Ads



வேலை செய்வதாக 'டுபாக்கூர்' அடிக்க முடியாது - கண்காணிக்க வந்துவிட்டது நவீன கருவி

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உண்மையான செயல்பாடுகளை துல்லியமாகக் கணிக்கும், மின்னணு கருவியை, ஜப்பானை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

இதுகுறித்து, நவீன கருவியை வடிவமைத்துள்ள நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது: அரசு ஊழியர்கள், பணி நேரத்தில், தங்கள் சொந்த வேலையில் ஈடுபடுவதால், அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதோடு, பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

'பிசினஸ் மைக்ராஸ்கோப்':

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர், தங்கள் பணி நேரத்தில் ஓய்வு எடுப்பதையும், வேறு வேலைகளில் ஈடுபடுவதையும், வழக்கமாகக் கொண்டுள்ளனர். பெண் ஊழியர்கள், தங்கள் உடை, அலங்காரப் பொருட்கள், உணவு தயாரிக்கும் முறை போன்ற கதைகளைப் பேசி, அலுவல் நேரத்தை வீணடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற செயல்களை தடுப்பதற்காகவும், ஊழியர்கள் உண்மையாக பணியாற்றும் கால அளவு மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றி துல்லியமாக அறிய, 'பிசினஸ் மைக்ராஸ்கோப்' எனப் பெயரிடப்பட்டுள்ள கருவி, 'நேம் பிளேட்' அல்லது 'பேட்ஜ்' வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக் கருவியை, ஊழியர்கள் அணிவதால், அவர்களின் செயல்பாடுகள் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன. இதை அணியும் நபர், எவ்வளவு நேரம் பணியாற்றினார், எவ்வளவு நேரம் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார், இருக்கையிலிருந்து எவ்வளவு தூரம் எழுந்து சென்றார், எங்கு சென்றார், யாருடன் பேசினார், எவ்வகை உரையாடலில் ஈடுபட்டார், எவ்வளவு நேரம் பணியாற்றாமல் அமர்ந்திருந்தார் போன்ற அனைத்து நடவடிக்கைகளும், மேலதிகாரிக்கோ, நிறுவன உரிமையாளருக்கோ, 'சென்சார் சிக்னல்' மூலம், உடனடியாக தெரிவிக்கும். இந்த நடவடிக்கைகளை பதிவு செய்து, பின் நாட்களிலும், மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்.

அதிக வாய்ப்பு:

இதன் மூலம், உண்மையாக பணியாற்றும் நபர் யார் என்றும், நிறுவனத்தை ஏமாற்றிப் பிழைக்கும் நபர் யார் என்றும், நிறுவன உரிமையாளர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இதை அணிவதன் மூலம், ஊழியர்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்ற அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு, நிறுவன அதிகாரி கூறினார்.

1 comment:

  1. இப்படி ஒரு கருவியை கண்டிப்பாக இலங்கையில் சகல அரச ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.அப்புறம் பாருங்களேன் என்ன நடக்குமென்று.75%ஆனோர் நிச்சயம் சேவையிலிருந்து விலக்கப்படுவர்.கைரேகையை கொண்டு ஒப்பமிடும் முறையை(Finger Scanning Machines) இலங்கை அரசு அப்போது அறிமுகம் செய்தவேளையில்,சுகாதார திணைக்கள ஊழியர்கள் அது வேண்டாம் என அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் செய்தார்கள்,நான் நினைக்கிறேன் இற்றைவரை இந்த கைரேகை முறை நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்று.

    ReplyDelete

Powered by Blogger.