கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரனையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடாத் தொகுதியின் மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரனையில் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி, பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் அதிபர் ஐ.எல். மஹ்றூப் அவர்களின் வழிகாட்டலில் ஒவ்வொறு மாதமும் சிறந்த வளவாளர்களைக் கொண்டு இம்மாணவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் விழிப்புணர்வுக் கருத்தரங்கின் இரண்டாவது நிகழ்வு 03.12.2013ஆந் திகதி மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கே.சீ.டீ.ஏ. யின் தலைவரும், பிரதி அதிபருமான ஜனாப் ஏ.எம். அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பிரதம வளவாளராக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மது (காஸிமி) (எம்.ஏ) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கினை நடாத்தினார்.
இந்நிகழ்வுக்கு ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கலாசாரப்பிரிவு குழுவின் தலைவரும் ஆசிரியருமான எஸ்.ஐ. றம்ளான், கே.சீ.டீ.ஏ. யின் ஆலோசகரும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமான எம்.எச்.எம். ஹக்கீம், கே.சீ.டீ.ஏ. யின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி, மற்றும் கே.சீ.டீ.ஏ. யின் நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Post a Comment