துருக்கியிலிருந்து சிரியா போராட்டத்திற்கு ஆதரவளித்த ஐரோப்பியர்கள் வெளியேற்றம்
சிரியா நாட்டில் நடக்கும் சண்டையில், அல் குவைதா அமைப்புடன் இணைந்து போரிட்ட, 1,100 ஐரோப்பியர்களை, துருக்கி அரசு, நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது.
சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத். பல ஆண்டுகளாக, ஆசாத் ஆட்சியில் உள்ளதால், அவரை பதவி விலகும் படி, எதிர்க்கட்சியினர், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அதிபர் ஆசாத், பதவி விலக மறுத்ததால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சிரியா நாட்டின் போராளிகளுக்கு ஆயுத உதவி அளிக்கின்றன. இதனால், சிரியாவில் சண்டை ஓயவில்லை. 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள், இந்த சண்டையில் மாண்டுள்ளனர். 10 லட்சம் பேர், அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிரியாவுக்கும், அண்டை நாடான துருக்கிக்கும் இடையே, அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், துருக்கியில் தங்கியிருந்த, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 1,100 பேர், அல் குவைதா அமைப்புடன் இணைந்து, சிரியா சண்டையில் பங்கேற்றுள்ளனர். இதற்காக, இவர்களை, துருக்கி அரசு, நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
.jpg)
Post a Comment