Header Ads



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கை

கணக்கியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே 05-12-2013 வியாழக்கிழமை கைச்சாத்திடப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை 05-12-2013 வியாழக்கிழமை (இன்று) கைச்சாத்திடுகின்றன. இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறை மாணவர்களில் நிதிக்கணக்கியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தங்கப் பதக்க விருதினைப் பெறுவதுடன் கணக்கியல் துறை மாணவர்கள் கல்விசார் மற்றும் தொழில்சார் நலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.