இலங்கை சமாதான நீதவானாக நியமனம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.சி.எம்.ஷம்சுல் முனா ஆகிய இவருக்கு அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் கிந்தோட்டை அல்பயான் அறபுக்கல்லுரியின் பழைய மாணவரும் சாய்ந்தமருது தாருல் குர் ஆன் அல் அஹதிய்யாவின் அதிபரும் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு அமைச்சின் இணைப்பாளரும் செரண்டிப் அமைப்பின் பிரதி தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.
கலைப்பிரிவு வெளிவாரி பட்டப்படிப்பினை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு வரும்.இவர் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் அல்ஹாஜ் மெளலவி. யூ.எல்.எம் .காசிம் எம்.ரி.எம்..ஜுனைதா தம்பதிகளின் 06 வது புதல்வருமாவார்.

Post a Comment