Header Ads



அக்கரைப்பற்றில் சர்வதேச மாற்றுத்திறனாளர் தின வைபவம் (படங்கள் இணைப்பு)

(எம்.ஏ.றமீஸ்)

சர்வதேச மாற்றுத்திறனாளர் தினத்தினையொட்டி அக்கரைப்பற்று கல்வி வலய விஷேட கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட வைவவம் இன்று (03) அக்கரைப்ற்று சாஹிறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்வி அதிகாரிகள்இ வைத்தியர்கள்இ அதிபர்கள் ஆசிரியர்கள் சமூக மட்டப் பெரியார்கள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின் போது அக்கரைப்பற்;று கல்வி வலயத்தின் கீழுள்ள அட்டாளைச்சேனைஇ அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய கல்விக்கோட்டங்களில் செயற்பட்டு வரும் விஷேட கல்விப் பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகளும்இ மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது கலந்து கொண்ட துறை சார் அதிதிகள் உரையாற்றுகையில்இ  மாற்றுத்திறனாளர்கள் சமூகத்தில் பராமரிக்கப் படுதலின் அவசியம் பற்றியும் எம் மத்தியில் உள்ள மாற்றுத்திறனாளர்களின் மனவலிமையை அதிகரித்து சமூக மட்டத்தில் அவர்களையும் நடமாடச் செய்தலின் தேவை பற்றியும் குறிப்பிட்டனர்.

இதன்போது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.