அகதிகள் தொடர்பாக ஆராய ஐ.நா. அதிகாரி இலங்கை வருகை - முஸ்லிம்களை சந்திப்பாரா..?
உள்ளக இடம்பெயர்வாளர்களின் மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதி சலோகோ பெயானி இலங்கை வந்துள்ளார்.
உள்ளக இடம்பெயர்வாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றுக் கொள்வதே தமது விஜயத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்வாளர்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான ஏதுநிலை மற்றும் சவால்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அவதானத்துக்கு கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட மீளாய்வு அறிக்கை, இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு வழங்க கூடிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஆராயப்படும் எனவும் மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதி சலோகோ பெயானி தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பல ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருதொகுதியின வடக்கில் மீளக்குடியேறியுள்ள போதிலும் அவர்களுக்கு உரியவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென குற்றம் சுமத்தப்படுகிறது. இந்நிலையில் குறித்த ஐ.நா. அதிகாரி முஸ்லிம்களை சந்திப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Post a Comment