Header Ads



போதைப் பொருளுடன் சட்டத்தரணி கைது

(Tm) மூன்று பக்கற்றுகள் ஹெரோயினுடன் சட்டத்தரணி என்று கருதப்படும் ஒருவரை அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

35 வயதாக இவர் திருமணம் முடித்த நபர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சாலியபுர பரசங்கஸ்வெவ வீட்டில் வைத்தே குறித்த நபரை விசாரணைக்காக கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவல்களை அடுத்தே அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.