நளீம் ஹாஜியாரை நினைவு கூற நாம் கடமைப்பட்டுள்ளோம் - கலாநிதி சுக்ரி
ஜாமியா நளீமியா கலாபீடம் மற்றும் இக்ராஹ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் ஸ்தாபகர் மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் 4வது அண்டு நினைவுச் சொற்பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை 03-12-2013 பிற்பகல் 06.00 மணிக்கு கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை 4வது முறையாகவும் நளீமீயாவின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வு ராபீயத்தாவின் தலைவர் அஷ;Nஷக் அப்துல் ராசீக் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய மறுமலச்சியின் தலைவர் யாக்ஹூத் நளீம், நளீமியாவின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ.எம். சுக்றி, பிரதிப் பணிப்பாளர் அகார் முகம்மத், பேராசிரியர் சோ. சுந்திரசேகரும் ஆகியோர் பிரதான மேடையில் அமர்ந்திருந்தனர்.
ஜாமியாவின் பழையமாணவர்கள், கல்வியலாளர்கள் நளிம்ஹாஜியாரின் உறவினர்களென மண்டபம் நிறைந்து காணப்பட்டனர்
“Knowledge Economy and Sri Lnaka Muslim “ கல்விப் பொருளாதார அறிவும் இலங்கையின் முஸ்லீம்களுமன் என்ற தலைப்பில் பேராசிரியர் சந்திரசேகரன் பிரதான உரையை ஆற்றினார்
கலாநிதி எம். ஏ சுக்றியின் தலைமையுரையில் - இந்த நாட்டில் கல்விக்காக பணியாற்றிய அறிஞர் சித்திலெப்பை, ஜ.எல். அப்துல் அசீஸ், ரீ.பி ஜாயா, கலாநிதி அசீஸ், ஆகியோர் வரிசையில் நளீம் ஹாஜியாரும இடம் பிடித்துள்ளார். நளீம் ஹாஜியாரின் கல்விச் சேவைக்ககா நாம் கட்டாயம் அவரை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
கலாநிதி அசீஸ் மற்றும் கலாநிதி ரீ.பி ஜாயா ஆகியோருக்கு மன்றங்கள் அமைத்து வருடந்தம் நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் நளீம் ஹாஜியாரையும் ஜாமிய பழைய மாணவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். என கலாநிதி சுக்றி தெரிவித்தார்.






Post a Comment