Header Ads



வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவணி

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு Road to Rights  நிறுவனத்தின் ஏற்பாட்டில் சம் வித் யுத் இளைஞர் கழகமும் கூமாங்குளம் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய மனித உரிமை விழிப்புணர்வு நடை பவணி 2013.12.07 சனிக்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பித்து கண்டி வீதி ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வவுனியா காரியாலயத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜவாஸ் மற்றும் சுதர்சன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. கௌரவ விருந்தினராக வவுனியா மாவட்ட சிரேஸ்ட சட்டத்தரணி செல்வி காயத்ரி முத்துராஜா, வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சிசிர செனவிரட்டன மற்றும் மாவட்ட இளைஞர சேவை அதிகாரி ஐ.ளு.சுகானி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் பெருந்திரளான இளைஞர்கள்; யுவதிகள் மற்றும் மாணவர்கள் பங்குபற்றினர். கௌவ விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட சிரேஸ்ட சட்டத்தரணி செல்வி காயத்ரி முத்துராஜா அவர்கள் மனித உரிமைகளின் தோற்றம் மற்றும் இளைஞர்களுக்கான உரிமைகள் பற்றி உரையாற்றினார். இதன்போது கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.





No comments

Powered by Blogger.