மாணவர்களின் பட்டமளிப்பு விழாவும், சிறுவர் சிறப்பு நிகழ்சிகளும்
(யு.எம்.இஸ்ஹாக்)
நிந்தவூர் சீ .ஓ லெஸ் தகீர் சர்வதேச கல்லூரி நடாத்தும் பாலர் (UKG) மாணவர்களின் பட்டமளிப்பு விழாவும் சிறுவர் சிறப்பு நிகழ்சிகளும் (Graduation 2013 & Junior joy ) என்ற மலர் வெளியீடும் 07.12.2013 நடை பெற்றது.
கல்லூரியின் அதிபரும் ,முகாமைத்துவ பணிப்பாளரும் முன்னாள் வடகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான ஐ.எம். இஸ்ஸதீன் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இவ்வைபவம் நடை பெற்றது.
நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அல் -ஹாஜ் யு.எல்.எம்.ஹாசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் . மாணவர்களின் பல கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் கௌரவிப்புகளும் இடம் பெற்றது. 30 க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டமளிப்பு நடை பெற்றது பெற்றோர்கள் பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.




Post a Comment