Header Ads



மதுபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்த பெண் கைது

அதிக குடிபோதையில் வந்து வீட்டுக்கு தீ வைத்து எரித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.  தங்கொட்டுவ - தாமரகுளிய பகுதியில் நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தங்கொட்டுவ - தாமரகுளிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஜயசிங்க ஜேடிகே ரோஹன சந்திரலால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

அதன்படி 48 வயதான பெண்ணை கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர்.  தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.