நீதியை மதிக்கக் கூடிய ஒழுக்கமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது - வாசுதேவ நாணயக்கார
மனிதவள அபிவிருத்தியில் இலங்கை அனைத்து வகையிலும் வெற்றியை அடைந்துள்ள போதிலும் போஷhக்கின்மை இன்னும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. ஏனெனில் புரதச்சத்துள்ள உணவுகளை உற்கொள்ளாமையும், உணவுச் செலவினைக் குறைத்து வேறு செலவுகளை தாங்குவதால் இவ்வாறு ஏற்படுகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் தெரிவிக்கையில் ,
நடைமுறை வாழ்க்கையில் செலவுக்காக தேவையான இலாப மட்டத்தை கணிக்கும் போது நான்கு குழந்தைகள் இருக்கும் வீட்டில் மாதாந்த வருமானம் ரூபாய் 25, 000 க்கு மிகவும் குறைவாயின் அவர்கள் அனைவரும் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களின் அரவணைப்பும், நலன்புரி வேலைத்திட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும். அதனால்தான் வாழ்வின் எழுச்சி என்ற திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. போஷhக்கின்மை வறுமையின் ஒரு அடையாளமாகும். 2012ஃ13 வறுமையின் அளவீடு மாதாந்த வருமானம் ரூபா. 19,313ஃஸ்ரீ குறிப்பிடப்பட்ட மாதாந்த வருமானம் 25,778ஃஸ்ரீ வீட்டு அத்தியாவசிய பொருட்களின் செலவு 40,887ஃஸ்ரீ இதனால் 50 இலட்சம் குடும்பங்களில் 38மூ வீதமானோர் சமுர்த்தி பெறுகின்றனர்.
சாதாரண குடும்பத்தின் உணவுக்கான செலவு 2009 ல் ரூபா. 13267ஃஸ்ரீ 2012ல் இது ரூபா. 15358ஃஸ்ரீ ஆகியுள்ளது. இன்றுள்ள திறந்த அலகு தனி மனிதனுக்கு தேவையான 2 வீதமான கலோரிப் பெருமானம் 2030 வருடம் ஆனாலும் இலங்கை மக்களுக்கு கிடைப்பது 1472 மு கலோரி பெருமானமே. அதில் ரூபா. 7000 மில்லியன் இவ் வரவு செலவுத் திட்டத்தில் போஷாக்கிற்காக ஒதுக்கியுள்ளமை பிரதானமானதாகும்.
அதேபோல வறிய மக்களின் சம்பளத்தை அதிகரித்து வாழ்வின் எழுச்சி திட்டத்தினூடாக இம்முறை அதிக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சமுர்த்தி பெறுபவர்களை மையமாகக் கொண்ட வேலைத் திட்டமாகும். இதே முறையாக 62மூ சதவ{தமானது முறைசாராப் பிரிவின் வேலை பார்க்கும் அதிகாரிகள் சம்பந்தமாக வட்டியற்ற கடன் கொடுப்பதுடன் அவர்கள் செலுத்தும் வரியின் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் அவர்களுக்கான கடன் வழங்குவதற்கு இம் முறை வரவு செலவு திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை இந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு வெற்றியான முன்னெடுப்பாகும்.
பொருளாதார அபிவிருத்தி பற்றி பேசும் போது தயாரிப்பு மற்றும் இதர உற்பத்தியை முதன்மைப்படுத்தாமல் பொருளாதாரத்தையும் மற்றும் சமூகத்தை முன்னிலைப்படுத்துவயோகும். என கூறிய அமைச்சர் அவர்கள் இன்று இது நடைமுறையிலிருப்பது குறைவாகும்.இதனால் ஏழ்மை நிலைமை தன்மை வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஊடாக சாதாரணமாக தீர்க்கப்பட வேண்டும் என தெளிவுபடுத்தினார்.
எமக்கு நீதியை மதிக்கக் கூடிய ஒழுக்கமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. பங்குச்சந்தையின் அதிகாரத்துக்கு சமூகத்தை அடக்கிக் கொள்ளாத சமூகத்தின் பொதுத் தேவைகளுக்கு ஏற்ப பங்குச்சந்தையானது பொருளாதார அபிவிருத்தியுடன் பொருளாதார இலாபம் வேறாக வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment