வவுனியா விகாராதிபதிக்கு எதிராக தொடர் முறைப்பாடுகள் - விளக்கமறியல் நீடிப்பு
(tm) வவுனியா அட்டமஸ்கட பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுவர் இல்ல காப்பாளரான கல்யாணதிஸ்ஸ தேரரை தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்ட நீதவான் எஸ். இராமகமலன் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் டிசெம்பர் 17ஆம் திகதி வரை சந்தேகநபரான விகாராதிபதியை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விகாராதிபதிக்கு எதிராக முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருவதனாலும் முறைப்பாட்டாளர்களின் தடயங்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டும் விளக்கமறியலை நீடித்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment