ஸ்பெயினில் வளர்ந்து வரும் ஹலால் சந்தையை ஒழுங்கமைக்க நடவடிக்கை
(A.J.M மக்தூம்)
ஸ்பெயினில் வளர்ந்து வரும் ஹலால் சந்தையை சீராக்கி, ஒழுங்குபடுத்தி, அதனை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில், ஸ்பெயின் உணவு தரப்படுத்தல் கட்டுப்பாட்டு சபை புதிய விதிமுறைகளை அமைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கர்டோபாவில் இயங்கி வரும் ஹலால் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இஸ்லாமிய வாரியத்தின் ஹலால் நிறுவனமும், ஸ்பெயின் உணவு தரப்படுத்தல் கட்டுப்பாட்டு சபையும் இணைந்து மேற்கொண்ட பேச்சு வார்த்தையிலேயே குறித்த விதிமுறைகளை அமைப்பதற்கான தீர்மானம் எட்டப் பட்டுள்ளது.
இது குறித்த பேச்சுவார்த்தையில் பிரதான இஸ்லாமிய அமைப்புகள், நுகர்வோர், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
ஸ்பெயினில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் 1.4 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளனர். இது நாட்டின் மொத்த சனத் தொகையில் மூன்று சதவீதமாகும்.
.jpg)
Post a Comment