Header Ads



மோடிக்காக களமிறங்கும் சல்மான்கான் குடும்பத்தினர்..!


(நஸ்ரினா நஜீப்)

ஆம், ஆள் நரேந்திர மோடிதான்.
குஜராத் கந்தி நகரில் 1934ல் பிறந்த 
மோடி சிறு பருவத்திலிருந்தே இந்திய 
இந்துத் தீவிரவாத இயக்கத்தின் (எஸ்.எஸ்.ஆர்) 
நடவடிக்கைகளினால் கவரப்பட்டு
அதன் உறுப்பினராக போய்ச் சேர்ந்தார்.
அரசில் முதுமாணிப் பட்டதாரியான மோடி
இந்திய குஜராத் மாநிலத்தின் 
தற்போது நெடுநாள் முதல்வர். 2001 முதல். 
மனிதன் துரவர வாழ்க்கை நடத்துகின்றவர்.
எனவே மனைவி பிள்ளை குட்டி எல்லாம் கிடையாது.

பகற்காய் சில பேருக்கு முகத்தைச் சுழிக்கின்ற கறியாக இருப்பது போல் மோடி என்றால் இந்திய முஸ்லிம்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பான பார்வை. குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறையின் சூத்திரதாரி நரேந்திர மோடி என்றொரு குற்றச்சாட்டு இருந்ததால் முஸ்லிம்களுக்கு அவர் மீது ஒரு பகற்காய்ப் பார்வை இன்று வரை இருந்து வருகின்றது. முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மோடியை பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவிப்புச் செய்திருக்கின்றது.

இந்திய அரசியலில் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனிய மகன் ராஹூல் காந்தி வேட்பாளர் என்ற நிலை. தற்போது இந்திய அரசியல் நிலவரப்படி வருகின்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடுமையான போட்டியொன்றை எதிர் நோக்குகின்றது, என்பது அனேகமான அரசியல் நோக்குனர்களின் அபிப்பிராயமாக இருந்து வருகின்றது.

அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை நிரதரப் பகைவனுமில்லை என்ற நியதிப்படி இந்தத் தேர்தலில் இந்திய முஸ்லிம்கள் மனநிலையும் மோடி விடயத்தில் ஆட்டம் கண்டிருக்கின்றது. என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. 

இந்தியாவின் செல்வாக்கு மிக்க நடிகர் சல்மான் கான் குடும்பத்தினர் தற்போது மோடிக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்றனர். இது விடயத்தில் இந்திய முஸ்லிம்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை அறிந்த கொள்ளக் கால அவகாசம் போதாது என்றாலும் சல்மான் கான் தந்தை அப்துல் ரஷPட்; சலீம் கான் மோடி தொடர்பாகக் கொடுத்திருக்கின்ற பேட்டி இந்திய எங்கிலும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

மோடியை எதிர்க்கும் மேதாவிகள் நிச்சயம் இதனைப் படித்துப் பார்க்க வேண்டும் என்ற தலைப்பிட்டு இந்தப் பேட்டி தற்போது பேஸ்புக்கில் போடப்பட்டுள்ளது. இந்தப் பேட்டி தற்போது அதிகளவு பேர் பகிந்து கொள்கின்ற செய்தியாகவும் மாறி இருக்கின்றது.
அவரது பேட்டியில் குஜராத் கலவரத்தை விட மும்பாய்க் கலவரத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டார்கள் அப்போது மகராஷ;டி மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் யார் அவரது கட்சி எது? மோடிக்கு எதிராக குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே அவரது எதிரிகளால் முன்வைக்க முடியும். தற்போது 12 வருடங்களாக குஜராத்தில் ஆட்சி நடாத்தி வருகின்ற மோடி ஆட்சியில் எந்தவொரு இனக் கலவரங்களும் நடந்திருக்கின்றனவா என்று சல்மான் கானின் தந்தை கேள்வி எழுப்புகின்றார். 
    
1947 வங்கக் கலவரம் 5000பேர், 1964 குர்கோலக் கலவரத்தில் 2000 பேர், 1980 ரஞ்சியில் 200 பேர், 1969 அகமதாபாத்தில் 512 பேர், 1970ல் 1985ல் பிவந்திக் கலவரத்தில் 226 பேர், 1980 மொரபாத்தில் 2000 பேர், 1983 அசாமில் 5000 பேர், 1984ல் டில்லிக் கலவரத்தில் 2738 பேர், 1985ல் குஜராத்தில் 300 பேர், 1986 அகமதாபாத் 59 பேர், 1982 மீராட்டில் 81 பேர், 1992 சூரத்தில் 175 பேர், 1979 ஜம்nஷட்பூரில் 125பேர், 

காங்கிரஸ் ஆட்சியில் இத்தனை காலவரங்கள் நடந்திருக்கின்றபோது இதனை மறந்து அவர்கள் தமது ஊழலை மூடி மறைப்பதற்காகவே இந்த குஜராத் கலவரத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கின்றனர். என்பதனை இந்திய மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருப்பதுடன். மோடியின் நிருவாகத் திறமைக்கும் சன்றிதழ்களை  அள்ளி வழங்கி இருக்கின்றார்.
அப்துல் ரஷPட் சலீம் கான்

இந்தியாவில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கின்ற ஒரே மாநிலம் குஜராத். இதற்கான சூரிய மின்சாரத் திட்டத்தை கொண்டு வந்தவர் மோடி. உலகில் மிக வேகமாக வளந்து வரும் மூன்றாவது பெரிய நகரம் என்ற சன்றிதலை அகமாதாபாத் பெற்றிருக்கின்றது. இதற்குக் காரணம் யார்? இந்தியாவில் வேலையில்லத் திண்டாட்டம் குறைந்த ஒரு மாநிலம் குஜராத். கடந்த 10 வருடங்களில் குஜராத்தில் எந்வொரு சிறு இன வன்முறைகளும் நடைபெறவில்லை. என்றெல்லாம் புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டி மோடிக்காக குரல் கொடுத்திருக்கின்றார் சலீம் கான். இந்திய சனத் தொகையில் கணிசமான முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடு. உலகில் இரண்டாவது பெரிய முஸ்லிம் நாடும் கூட, எனவே முஸ்லிம்கள் வாக்கைப் பெற இந்தப் பிரசாரங்கள் எவ்வளவு தூரம் கை கொடுக்கும் என்று தெரிய வில்லை. ஏனெனில் சல்மான் கானை ஒரு மதம் மாறிய முஸ்லிமாக சில முஸ்லிம் சமயத் தலைவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் அறிவிப்புச் செய்திருக்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.