Header Ads



பைசர் முஸ்தபா மன்றத்தினால் 1500 பேருக்கு இலவச 6 மாதகால ஆங்கில பயிற்சிநெறி


(அஷ்ரப்.  ஏ. சமத்)

பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவின் ஏற்பாட்டில் பைசர் முஸ்தபா மன்றத்தினால் கொழும்பு மாநகரில் உள்ள 1500  இளைஞர்கள் பாடசாலை மாணவர்களுக்கு  இலவச 6 மாதகால ஆங்கில பயிற்சிநெறியொன்று ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது.  

இப் பயிற்சி நெறியை  திங்கட் கிழமை (9)ஆம் திகதி  கொழும்பு மியுசியஸ் கல்லூரியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று(6)ஆம் திகதி  அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இத் தகவலைத் தெரிவித்தார்.

இந் நிகழ்வுக்கு இலங்கையில் உள்ள இந்திய பெற்றோல் கம்பணி அனுசரணை வழங்குகின்றது. இந் நிறுவணம் ஏற்கனவே திருகோணமலையில் இப் பயிற்சிநெறிக்கு அனுசரணை வழங்கி ஆங்கில பயிற்சிநெறி நடைபெற்று வருகின்றது.

இவ் ஊடக மாநாட்டில் இலங்கையில் உள்ள இந்திய பெற்றோலியக் கம்பணியில்  முகாமைத்துவ பணிப்பாளர் சுபோ தக்வல்,  மற்றும் இப் பயிற்சிநெறி சம்பந்தமாக  பேராசிரியர் ரன்ஜித் பண்டாரவும்  கலந்து கொண்டு தகவல்களைத் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள அகதியா, அறநெறி ஹிந்து கிரிஸ்த்துவ பாடசாலைகளில் உள்ள மாணவர்களும் இப் பயிற்சி நெறியில் இணைந்து கொள்ளலாம். இப் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக முடித்த ஒருவர் பரீட்சையில் தோற்றி சான்றிழும் வழங்கப்படும்.  இப் பயிற்சிநெறியை பயின்ற ஒருவர் சிறந்த ஆங்கிலம்  பேசக் கூடியவராகவும் எழுதக் கூடியவராகும்  பயின்று வெளியேறக் கூடிய வகையில் இப் பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. என ஆங்கில விரிவுரையாளர் திலக் கருத்து தெரிவித்தார். 



No comments

Powered by Blogger.