அக்கரைப்பற்றில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு
(எம்.ஏ.றமீஸ்)
இம்மாதம் நடைபெறவுள்ள க.பொ.த (சா/த) பரீட்சையின்போது பரீட்சைக் கடமைகளில் ஈடுபடவுள்ள அக்கரைப்பற்று, கல்முனை, திருக்கோவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (02) அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதிப் பரீட்சை ஆணையாளர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட வலயக்கல்விப் பணிப்பாளர்களான ஆர்.சுகிர்தராஜன், ஏ.எல்.எம்.காசிம் மற்றும் பரீட்சைக்கடமைகளில் ஈடுபடவுள்ள பல நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.




Post a Comment