Header Ads



தேங்காய் எண்ணெயில் கலப்படம் - நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை

(ஏ.எல்.ஜுனைதீன்)

இலங்கைச் சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயில் பெரும் பகுதி பாம் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெயால் கலப்படம் செய்யப்பட்டவையே என அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிக்கின்றது.

சந்தையில் விற்பனைக்கு விடப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான முறைப்பாடுகளையடுத்து வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து அத்தகைய தேங்காய் எண்ணெய்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அவற்றில் கலப்படங்களைச் செய்திருப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதற்கமைய தேங்காய் எண்ணெய் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள்  100 இல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனப் பகுப்பாய்வின்போது 30 மாதிரிகளில் 50 சதவிகிதம் பாம் எண்ணெய் அல்லது தாவர எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.