மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் 5 ஆம் திகதி வியாழக்கிழமை பாலர் வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இப்பாடசலையின் அதிபர் ஐ. எல். அலியார் லெவ்வை தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இவ்விழாவில் பிரதம அதிதி உரையாற்றுகையில்: 'மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னின்று செயற்படும் மாளிகைக்காடு மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் பிரதி அமைச்சர் றிசான் வழங்கிக் கெளரவித்தார்.




Post a Comment