நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் 6 ஆம் திகதி மூடப்படுகின்றன
(ஏ.எல்.ஜுனைதீன்)
நாட்டிலுள்ள சகல அரச (தமிழ் முஸ்லிம் சிங்களம் ) பாடசாலைகளும் இவ்வருட மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசம்பர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது.
இதேவேளை அனைத்து அரச (தமிழ் முஸ்லிம் சிங்களம்) பாடசாலைகளுக்கும் 2014 ஆம் புதிய கல்வி ஆண்டுக்கான மூன்று தவணைகளுக்குரிய நேரசூசியை கல்வி அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் சிங்கள முஸ்லிம் பாடசாலைகளுக்கான நேரசூசி குறித்த மாகாண, மாவட்ட, வலய, பிரதேச கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான நேரசூசி
முதலாம் தவணை 02 ஜனவரி 2014 (வியாழன்) தொடக்கம் 08 ஏப்ரல் 2014 (செவ்வாய்) வரை.
இரண்டாம் தவணை 21 ஏப்ரல் 2014 (திங்கள்) தொடக்கம் 01 ஆகஸ்ட் 2014 (வெள்ளி) வரை.
மூன்றாம் தவணை 01 செப்டம்பர் 2014 (திங்கள்) தொடக்கம் 05 டிசெம்பர் 2014 (வெள்ளி) வரை.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான நேரசூசி
முதலாம் தவணை 02 ஜனவரி 2014 (வியாழன்) தொடக்கம் 10 ஏப்ரல் 2014 (வெள்ளி) வரை.
இரண்டாம் தவணை 16 ஏப்ரல் 2014 (புதன்) தொடக்கம் 27 ஜுன் 2014 (வெள்ளி) வரை.
மூன்றாம் தவணை 04 ஆகஸ்ட்2014 (திங்கள்) தொடக்கம் 05 டிசெம்பர், 2014 (வெள்ளி) வரை.

Post a Comment