ஹமாஸ் உயர்மட்டத் தலைவர்கள் முதல்முறையாக மலேசியாவுக்கு விஜயம்
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் காலித் மிஷால் தலைமையிலான தூதுக் குழு ஒன்று மலேஷிய தலைநகர் குவாலாலம்பூரை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது. மலேஷிய ஆளும் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கவே தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.
இதன்போது காலித் மிஷால் மலேஷிய ஜனாதிபதி மற்றும் ஆளும் ஐக்கிய மலேஷிய தேசிய கட்சியின் தலைவர்கள் உட்பட பல அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாக ஹமாஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தவிர மிஷால் இன்று செவ்வாய்க்கிழமை சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்ற இருப்பதாகவும் அங்கிருக்கும் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும் அவர் உரையாற்றுவார் என்றும் ஹமாஷ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் பிரதிநிதிகள் மலேஷியாவுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். கடந்த 2006 ஆம் ஆண்டு பலஸ்தீன பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய ஹமாஸ், பத்தாஹ் அமைப்புடனான மோதலை அடுத்து கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

Post a Comment