Header Ads



ஈரானுடன் அணு ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் என்கிறது அமெரிக்க, வரலாற்று தவறு என இஸ்ரேல் வர்ணிப்பு

(நஜீப் பின் கபூர்)

ஈரானின் அணுச் செரிவூட்டல் விவகாரத்தில் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருந்த இஸ்ரேல் இன்று அல்லது நாளை ஈரான் அணுச் செரிவூட்டல் மையங்களைத் தாக்கி அழித்துவிடும். அதற்கு ஈரான் கொடுக்கின்ற பதிலடி மத்திய கிழக்கில் மாபெரும் போரொன்றை தோற்றுவித்து அது மூன்றாம் உலகப் போராகக்கூட உருவெடுத்து விடலாம் என்ற அச்சம் உலகம் பூராவிலும் கடந்த சில வருடங்களாக நிலவிவ வந்தது.

கொந்தளிப்பான அந்த நாட்களில் ஈரான் மீது கைவைக்கின்ற பலம் இஸ்ரவேலுக்குக் கிடையாது. தவறியும் அப்படி நடந்து விட்டால் நாம் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை இல்லாமல் பண்ணிவிடுவோம் என்று அப்போதய ஈரான் அதிபர் அகமதி நிஜாத் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். இஸ்ரேல் சொன்ன படி ஈரானைத் தாக்கவுமில்லை. ஈரான் சொன்ன படி  இஸ்ரேலை அழிக்கவுமில்லை. இந்த முறுகல் நிலைக்கு மத்தியில் ஈரானிய அரசியல் விதிகளின் படி ஜனாதிபதியாக இருந்த அகமதி நிஜாத் அடுத்து வந்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாதிருந்தது. அந்த நாட்டில் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்தப் பின்ணணியில் நடந்த அதிபர் தேர்தலில் மிதவாத போக்குடடைய ஹசன் ரவ்ஹானி ஈரான் ஜனாதிபதியாக தெரிவானர். இது அமெரிக்காவுக்குச் சற்று ஆறுதல் கொடுத்த செய்தியாக இருந்தது. இதனை சாதகமாக வைத்துக் கொண்டு அமெரிக்க அணுவிவகார விடயமாக ஈரானுடன் இஸ்ரவேலுக்குத் தெரியாமல் இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இது எவ்வளவு நம்பகத் தன்மையான செய்தி என்று தெரிய வில்லை. என்றாலும் இஸ்ரவேலுக்குத் தெரியாமல்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகச் சொல்லப்படுகின்றது. எனவேதான் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்று குறிப்பிடுகின்ற போது, இஸ்ரேல் பிரதமர் பெஜ்சமின் நெத்தன்யாஹூ பெரும் வரலாற்றுத் தவறு நிகழ்ந்து விட்டது என்று குறிப்பிடுகின்றார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாம் இஸ்ரேலுக்குப் பெரும் பாதுகாப்பை கொண்டு வந்து கொடுத்திருக்கின்றோம். என்று அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா குறிப்பிடுவதுடன் ஈரான் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அணுச் செரிவூட்டலை மேற் கொள்வதற்கும் நாம் அதற்கு அணுமதி வழங்கி இருக்கின்றோம். எனவே இருதரப்பிற்கும் இது கௌரவமானதொரு ஒப்பந்தம் என்று வாதிடுகின்றார் அமெரிக்க அதிபர். 

இப்போது இந்த ஒப்பந்தம் பற்றியும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம். கடந்த செப்தெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பங்கு கொள்வதற்காக புதிய ஈரானிய அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்க சென்றிருந்தார் அப்போது அவரைத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவருடன் 15 நிமிடங்கள் இரகசியமாகத் தெலைபேசியில் பேசினார்.

இதன் மூலம் அமெரிக்கா அதிபருக்கும் புதிய மென்போக்கு ஈரான் அதிபருக்குமிடையே நல்லப்பிரயமொன்று ஏற்பட்டது. அதன் மூலம் அமெரிக்கா ஈரான் மீது போர் என்ற தனது திட்டத்தை மாற்றிக் கொண்டது. அத்தடன் ரஷ;யா, சீனா போர் என்ற நிலை வந்தால் நாம் நிச்சயமாக அமெரிக்காவின் பாக்கம் இருக்கப்போவதில்லை என்று பகிரங்கமாக முன்பு அறிவிப்புச் செய்ததுடன் போர்என்ற நிலையில் உலகில் ஏற்படுகின்ற  பேரழிவுக்கு அமெரிக்க முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அவை எச்சரிக்கை விடுத்திருந்து. என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிகாவுக்கும் ஈரானுக்கமிடையே ஏற்பட்டிருக்கும் புதிய நல்லுறவை ரஷ;யா இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பமாகத் கண்டு அதற்குத் தனது பூரண ஒத்துழைப்பையும் வழங்கியது. அமெரிக்கா, ரஷ;யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானிய ஆகிய நாடுகளுடன் ஜேர்மனும் இந்தப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது.

ஜெனிவாவில் நான்கு நாள் இரகசியாக நடந்த இந்தப் பேச்சு வார்த்தைகளை அமெரிக்காவில் இருந்தவாறு அதிபர் ஒபாமாவும் ஈரான் டெஹ்ரானில் இருந்தவாறு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியும் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தைகளின் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1.இதன் பின்னர் ஈரான் அணுவாயுதத் திட்டங்களைத் தீவிரப்படுத்தாது.

2.இதனை மீறி ஈரான் செயலாற்றுகின்றது என்ற சந்தேகம் வந்தால் அதனை வேண்டிய நேரம் பரீசிலனை பண்ணணுகின்ற அதிகாரம் சர்வதேச அணுக் கண்காணிப்புக் குழுவுக்கு இருக்கின்றது.

3.அணுத் தேவைக்கு யுரேணியம் ஐந்து சதவீதத்திற்கு மேல் கொள்வனவு செய்வதற்கு ஈரான் அனுமதிக்கப்பட மாட்டாது.

4.அணுத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி இருப்பதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட இருக்கின்றது.

5.அணுத்திட்டத்தை முடக்கியதற்காக  இலங்கை நாணயப்படி 100000 கோடி ரூபாய்கள் ஈரானுக்கு நஷ;ட ஈடாக வழங்கப்பட இருக்கின்றது. கிட்டத்தட்ட இத்தொகை 2014 இலங்கையின் மொத்த தேசிய வருமானத்திற்கு கிட்டடிய தொகையாகும்.

6.அணுவாயுத திட்டத்தை முற்றாக ஈரான் கைவிடும் பட்சத்தில் இதனை விட பன்மடங்கு நன்மைகள் ஈரானுக்குக் கிடைக்க ஒழுங்குகள் செய்யப்படும் என்றும் உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு இருதரப்பினருக்கும் வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. யாரும் வெற்றி பெறவுமில்லை யாரும் தோற்றப்போகவுமில்லை என்று ரஷ;யா வெளிவிவகார அமைச்சர் செர்வி லவ்ரோய் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய இந்த உடன்பாட்டை வரவேற்றுள்ளது. ஈரான் விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கின்ற சுன்னி நாடான சவூதி அரேபியாவும் உடன்பாட்டைப் பாராட்டி இருக்கின்றது. ஆனால் இஸ்ரேலோ நாம் முன்பு சொன்னது போல் பெரும் வரலாற்றுத் தவறொன்று நிகழ்திருப்பதுடன் ஈரானுக்கு இந்த உடன்பாட்டின் மூலம் அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதுடன் அது தனது அணுவாயுத வல்லமையை மேம் படுத்திக்கொள்ள இதன் மூலம் வாய்பளிக்கப்பட்டுள்ளது என்று தனது அதிர்ப்த்தியை தொடந்து வெளியிட்டு வருகின்றது.

ஈரான் இது தமது நாடு சார்வதேச அரங்கில் பெற்ற பெருவெற்றியாக கருதி வீதிகளில் மகிழ்ச்சி ஊர்வலங்கள் நடத்தப்பட்டிருக்கின்றது. என்றாலும் இந்த உடன்பாட்டில் முக்கிய பங்குகாராக இருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த உடன்பாடு முன்னெடுத்தச் செல்வதில் நிறையவே நெருக்கடிகளும் நம்பகத்தன்மையான செயல்பாடுகளும் அவசியம் தேவைபப்டுகின்றது என்று செவ்வாய்க்கிழமை பொது வைபவம் ஒன்றில் பேசி இருக்கின்றார்.

இதற்கிடையில் தானும் ஒரு வல்லரசுதான் என்ற நிலையில் ஈரானும் சர்வதேச அரங்கில் சில நகர்வுகளைத் தொடந்தும் நடாத்திக் கொண்டிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரானில் நீர் முழ்கிகக் கப்பல்கள் சில இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு நல்லெண்ண விஜயங்களை மேற் கொண்டிருந்தது.

அத்தடன் சில தினங்களுக்கு முன்னர் உலகில் மிகப் பெரிய ஆளில்லா தாக்குதல் விமானத்தை தயாரித்து அதனை ஈரான் உலகிற்கும் காட்சிப்படுத்தி இருந்தது. மேலும் இதே காலப்குதியில் நவீன எவுகணை ஒன்றையும் ஈரான் வெற்றிகராமாகப் பரீச்சித்திருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. சமாதானம் ஒருபக்தில் சண்டைக்கான முஸ்தீபுகள் மறுப்பக்கத்தில் என்று தான் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

No comments

Powered by Blogger.