அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகள் (படங்கள்)
(எம்.ஏ.றமீஸ்)
அகில இலங்கை பாடசாலை ரகர் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான ரகர் காணிவல் போட்டி நிகழ்ச்சி இன்று (03) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பலத்த மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றது.
இக்காணிவல் போட்டியின் போது அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழுள்ள 12 வயதிற்குட்பட்ட 20 அணிகளைச் சேர்ந்த 220 மாணவப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அகில இலங்கை ரகர் போட்டி இணைப்பாளர் கே.எஸ்.பி.கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கான உடற்கல்விக்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல், ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கான ரகர் இணைப்பாளரும் ஆசிரியருமான ஐ.எல்.எம்.பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இக்காணிவல் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை நிகழ்வின் நினைவாக தேசத்திற்கு நிழல் எனும் திட்டத்திற்கமைவாக பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய முன்றலில் அதிதிகளால் மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment