Header Ads



கல்முனை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  கல்முனை குடி அலியார்  வீதியில் உள்ள வீடொன்றில்  இடம் பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார் . இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது .

கடந்த  29.112013, 30.11.2013,01.12.2013 ஆகிய மூன்று தினங்களிலும்  கல்முனை குடி , இலக்கம் 299ஏ, அலியார் வீதியில் உள்ள  பொறியியலாளரான  முகம்மத் முஸ்தபா முகம்மத் அஸ்கர்  என்பவரது  வீடு மறைமுகமாக உடைக்கப் பட்டு  வீட்டில் இருந்த 374500 ரூபா பெறுமதியான  லெப்டொப் ,சீ .டீ  பிளேயர் ,மின்சார உபகரணங்கள் ,சாறி ,சல்வாரி ,தங்கநகை என்பன  திருடப் பட்டிருந்தன . 

இந்த சம்பவம் இடம் பெற்ற வேளை  வீட்டு சொந்தகாரர்கள்  கொழும்பில் இருந்துள்ளனர் . இந்த சந்தர்பத்தில்தான்  மூன்று நாட்களும்  வீட்டில் இருந்த பொருட்கள் கள்வனால்  வெளியே எடுத்து செல்லப் பட்டிருப்பதாக பொலிஸார்  கூறுகின்றனர். 

வீட்டுரிமயாளர்  கல்முனை பொலிஸ்  நிலையத்தில்  செய்த முறைப் பாட்டை தொடர்ந்து  பாலமுனை உதுமாபுர வீதியை  சேர்ந்த  ஒருவர்  சந்தேகத்தின் பெயரில்  கைது செய்து விசாரணை செய்த போது  இவரால் சில பொருட்கள் விற்கப்பட்டும் , சில பொருட்கள் இவரிடமிருந்ததும் தெரிய வந்துள்ளது.

கல்முனை பொலிஸ்  தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .எம்.கப்பார்  அவர்களின் வழிகாட்டலில்  பெருங்குற்ற தடுப்பு பொறுப்பதிகாரி  பொலிஸ்  பரிசோதகர்  சோமகுமார  தலைமையிலான  உதவி போலிஸ் பரிசோதகர் உக்குபண்டா ,பொலிஸ்  சாஜன்களான  முஸ்தபா ,ரஞ்சித் ஆகியோரே  ,இந்த சந்தேக நபரை  கைத்கு செயுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று 03.12.2013 கல்முனை நீதிவான் நீதி மன்றில் ஆஜர் செய்யப் பட்ட பொது நீதிவான் நீதிமன்ற நீதிபதி  சந்தேக நபரை  12 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.