வேகத்தை மீறிய குற்றத்திற்காக சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளிகள் இடும் முறை..!
(Nf) வேக எல்லையை மீறிய குற்றத்திற்காக சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளிகள் இடும் முறையொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன் முதல் கட்டத்தின் கீழ் அதிவேக மார்க்கங்களில் இந்த நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச். ஹரிச்சந்திர தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளிகள் இடும் நடைமுறை தற்போது இரண்டு தவறுகளுக்காக மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது.
மது போதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன விபத்துக்களை ஏற்படுத்தல் ஆகிய தவறுகளுக்காகவே இவ்வாறு புள்ளிகள் இடப்படுகின்றது.
அதன் பிரகாரம் 14 ஆயிரம் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களில் புள்ளியிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச். ஹரிச்சந்திர மேலும் தெரிவிக்கின்றார்.
.jpg)
Before, that you need to have sign posts with Max speed limits on each and every road. After that, you may apply points system.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete