Header Ads



பொல்கொல்லையில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், வதிவிட பயிற்சிக் கருத்தரங்கு


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், "சமூக ஊடகங்களின் தாக்கம்" (The Impact of Social Media) என்ற தொனிப்பொருளில் இரு நாள் வதிவிட பயிற்சிக் கருத்தரங்கொன்று, பொல்கொல்லை National Institute of Cooperative Development இல் இடம் பெற்றது. 

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் N.M. அமீனின் தலைமையில், நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தினங்களில் இடம்பெற்ற பயிற்சிக் கருத்தரங்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 25 சமூக ஊடகவியலாளர்கள் பங்குபற்றினர்.

இதில் வளவாளர்களாக கல்வியியல் கல்லூரி முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், நவமணி பிரதி ஆசிரியர் தாஹா முஸம்மில், விடிவெள்ளி பொறுப்பாசிரியர் M.B.M. பைரூஸ், Islamic Perspective சஞ்சிகை ஆசிரியர் ஹனீபா முஹம்மத் பாயிஸ் மற்றும் ஜாவித் முனவ்வர் ஆகியோர் பயிற்சிகளை நடாத்தினர்.  




No comments

Powered by Blogger.